Selvarajah Dusanth - 18th Birthday

நோர்வே ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். செல்வராஜா துஷாந் அவர்களின் 18வது பிறந்த தின நல்வாழ்த்துக்கள். 

நோர்வே என்னும் நாட்டிலே மலைகள் சூழ்ந்த இடத்திலே கடலும் காற்றும் சேர்த்துக் கொடுத்த அலைபோன்று இரு தேவதைகள் நடுவே

சுட்டெரிக்கும் சூரியனைப் போல் ஒரு தேவகன் தான் - இந்திரன் படைத்த எங்கள் வீட்டு- அழகு ஒளிச்சுடர் துஷாந் 

எங்கள் உடலும் உள்ளமும் ஒன்றாய் சேர்த்து உயிரின் உருவமாய் நிற்கும் அன்புச் செல்வத்தின் 18வது பிறந்த நாள் இன்று 

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் நாம் இரசிப்பது நிலவைத்தான்- ஆனால் பூமியில் நீ பிறந்த நாளில் இருந்து நாம் இரசிப்பது உன்னையும், உன் அழகையும், நடனத்தையும் தான் 

உலகிலே ஏழு அற்புதங்கள் உண்டு என்பர் ஆனால் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதம் நீ பிறந்த நாள் இன்று 

சூரியனிலிருந்து வரும் ஒளியைப்போல் உன்னிலிருந்து வரும் சிரிப்பை என்றும் நாம் பார்த்து இரசிக்க வேண்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் இன்பமாய் நீ வாழ வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

வாழ்த்துவோர்  அன்பு அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அப்பம்மா, சித்தப்பாமார், சித்திமார், அன்ரிமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மச்சாள்மார், அத்தைமார், அத்தான்மார் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்

The contents of this page was created by the user. Lankasri network does not hold any responsibilities for the accuracy, completeness or infringements of any copyright materials of this content. Please report, if you find anything suspicious, abusive or if you think it’s a spam or shouldn’t be on Lankasri network.